அசுர வளர்ச்சியாலும் மக்களின் பேராதரவாழும் சூரியின் அம்மன் உணவகத்தின் 7 ஆவது கிளை திறப்பு..!! 
 

 
1

சூரியின் குடும்பத்தினர் மதுரையில் அம்மன் காபி & டிபன்  என்ற பெயரில் உணவகம் நடத்தி வருகிறார்கள். இந்த உணவகத்தின் 7 வது கிளையை சூரி தன் குடும்பத்தினருடன் சேர்ந்து திறந்து வைத்தார். இது குறித்து ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள சூரி கூறியுள்ளதாவது,

“ஒரு டீக்கடையாக உருவான எங்கள் அம்மன் உணவகம், இன்று ஏழாவது கிளையாக வளர்ந்து நிற்கிறது. மதுரை மக்களின் வாஞ்சையும் வரவேற்பும்தான் இந்த வளர்ச்சிக்குக் காரணம். உணவகத்துக்காக உழைக்கும் உடன்பிறந்த சகோதரர்களின் அன்னமிட்ட கைகளை அன்போடு குலுக்குகிறேன்... ஒரு நடிகன் என்பதால் வெளிச்சம் என் மீது விழலாம்... ஆனால், அடுப்பின் நெருப்பில் நிற்பவர்கள் என் அண்ணன், தம்பிகள் தான். சுத்தம், சுவை, சத்து எனப் பார்த்துப் பார்த்து இவர்கள் காட்டும் அக்கறைதான், அம்மன் உணவகத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம்! அடுத்தடுத்த உயரம் தொட உந்துதலாக இருக்கும் அம்மன் உணவக பணியாளர்கள் அத்தனை பேருக்கும் பேராதரவு தரும் அருமை மதுரை மக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தன் மீது நடிகன் என்ற வெளிச்சம் விழுந்தாலும், இந்த உணவக்த்தின் வெற்றிக்கு தன் உடன்பிறந்தவர்களின் ஓயாத உழைப்பும் மக்கள் மீதான அக்கறையும் தான் என்று சூரி குறிப்பிட்டுள்ளது நெகிழ்ச்சியூட்டுவதாக அமைந்துள்ளது.


 


 

From Around the web