விஷால் - அஞ்சலி படத்திற்கு 9 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த விடிவுகாலம்..!

 
விஷால் - அஞ்சலி படத்திற்கு 9 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த விடிவுகாலம்..!

கடந்த 2012-ம் ஆண்டு சுந்தர். சி இயக்கத்தில் விஷால், அஞ்சலி மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடித்த படம் ‘மத கஜ ராஜா’. சுருக்கமாக எம்.ஜி.ஆர் என்று குறிப்பிடப்பட்ட இந்த படம் பல ஆண்டுகளாக வெளிவராமல் இருந்தது.

தயாரிப்பு தரப்பில் இருந்த பிரச்னை காரணமாக படத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக படக்குழுவிடம் இருந்து தகவல்கள் வெளியாகின. ரசிகர்களிடமும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருந்தது. ஆனால் தொடர்ந்து படம் வெளியாவதில் தாமதம் இருந்து வந்தது.

இந்நிலையில் சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘ஆம்பள’ படம் வெளியானது. அதை தொடர்ந்து எம்.ஜி.ஆர் படத்தை பலரும் மறந்தே போனார்கள். மேலும் வரலட்சுமி மற்றும் விஷால் நடிப்பில் சண்டக்கோழி - 2 படம் வெளியானது. அதனால் விஷால் - வரலட்சுமி அந்த படத்தில் இணைந்து நடித்தனர்.

ஆனால் தொடர்ந்து மத கஜ ராஜா படம் நிலுவையில் இருந்தது. தற்போது இந்த படத்தை ஒ.டி.டி தளத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. தவிர, இந்த படத்தை பெருந்தொகை கொடுத்து பிரபல ஒ.டி.டி நிறுவனம் வாங்க முன்வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத கஜ ராஜா படத்தில் விஷால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் வரலட்சுமி மற்றும் அஞ்சலி இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் சந்தானம், நிதின் சத்யா, சோனுசூட், கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

From Around the web