90ஸ் கிட்ஸ் கனவுக்கன்னி த்ரிஷா படுகாயம் - ரசிகர்கள் அதிர்ச்சி ..!! 

 
1

தென் இந்திய திரைத்துறையில் முக்கிய கதாநாயகியாக வலம் வருபவர் த்ரிஷா. தமிழ் சினிமாவில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட கதாநாயகியரை விரல் விட்டு எண்ணிவிடலாம்.  அந்த நிலையில் 2002-ல் வெளியான ‘மெளனம் பேசியதே’ படத்தின் மூலம் மெளனப் புயலாக நுழைந்தார் சென்னையில் பிறந்து வளர்ந்து மிஸ் சென்னை பட்டமும் வென்றவரான த்ரிஷா.

மாடலிங் துறையிலிருந்து பல விளம்பரங்களில் நடித்துக்கொண்டிருந்த த்ரிஷா இயக்குநர் பிரியதர்ஷனின் ’லேசா லேசா’ படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், அமீரின் ‘மெளனம் பேசியதே’ முதலில் வெளியானது. முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்தார்.

1

2010-ல் வெளியான இயக்குநர் கெளதம் மேனனின் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ த்ரிஷாவின் திரைவாழ்வில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. அந்தப் படத்தின் ‘ஜெசி’ கதாபாத்திரம் கார்த்திக்கால் மட்டுமல்லாமல் ரசிகர்களாலும் பெரிதும் நேசிக்கப்பட்டது. அடுத்ததாக 2018-ல் வெளியான ‘96’ அவருக்கு மிகப் பெரிய பெயரையும் புகழையும் ஈட்டித் தந்தது. அந்தப் படத்தில் ‘ஜானு’வாக தன் நிஜ வயதைவிட சில ஆண்டுகள் அதிக வயதுடைய கதாபாத்திரத்தில் மிக அழகாக நடித்திருந்தார் த்ரிஷா. படம் முழுக்க அந்த மஞ்சள் நிற சுடிதாரில் மட்டுமே தோன்றினாலும் ரசிகர்களால் திரையிலிருந்து கவனத்தைச் சிதறவிட முடியவில்லை. கடைசியாக இவர் மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் குந்தவைபாத்திரத்தில் நடித்திருந்தார்.

1

இந்நிலையில் பொன்னியின் செல்வன், சக்சஸ் மீட்டில் த்ரிஷா எதற்காக கலந்துகொள்ளவில்லை. ஒருவேளை படக்குழுவுடன் ஏதேனும் மனஸ்தாபம் ஏற்பட்டுவிட்டதோ என ரசிகர்கள் குழம்பினர். இப்படிப்பட்ட சூழலில் வெளிநாட்டு டூரின்போது த்ரிஷா எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததில் அவருடைய காலில் அடிப்பட்டிருக்கிறது. அந்தப் புகைப்படத்தையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். 

இதனைப் பார்த்த ரசிகர்கள் இந்த விபத்தால்தான் த்ரிஷாவால் பொன்னியின் செல்வன் சக்சஸ் மீட்டில் கலந்துகொள்ள முடியவில்லை என்று புரிந்துகொண்டனர். மேலும், அவருக்கு ஏற்பட்ட காயத்திலிருந்து விரைவில் அவர் வெளியில் வரவேண்டுமென்றும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். 

 

From Around the web