மீண்டும் இணையும் ‘96’ கூட்டணி- இது சர்ப்பரைஸ் அறிவிப்பு..!

 
விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் பிரேம் குமார்
தமிழில் ‘96’ படம் மூலம் மிகப்பெரியளவில் கவனமீர்த்த இயக்குநர் பிரேம் குமாருடன் மீண்டும் இணைந்து விஜய் சேதுபதி பணியாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘96’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தேசியளவில் இந்த படத்துக்கு வரவேற்பு கிடைத்தது. படத்தில் நடித்த விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்டோரை ரசிகர்கள் கொண்டாடினர்.

குறிப்பாக படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவுக்கு பாராட்டுகள் குவிந்தன. தமிழில் சினிமாவின் என்றும் மறக்கமுடியாத கிளாஸிக் லவ்ஸ்டோரி படமாக மாறியது 96.

தற்போது இந்த படத்தின் இயக்குநர் பிரேம் குமார் அடுத்த இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகவுள்ளது.

தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் அடுத்தடுத்து பல படங்களை கமிட் செய்து வைத்துள்ளார் விஜய் சேதுபதி. அந்த படங்களை முடித்த பிறகு பிரேம் குமார் இயக்கும் படத்தில் அவர் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web