தெலுங்கு, கன்னடத்தை தொடர்ந்து இந்தியில் ரீமேக்காகும் ’96’..!

 
96 திரைப்படம்

தமிழில் பிரேம் குமார் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘96’ படம் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கத்தில் வெளியாகி மெகா ஹிட்டான திரைப்படம் ‘96’. விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படம் அவர்களுடைய சினிமா வாழ்க்கையில் திருப்புமுனை படமாக அமைந்தது.

இந்த படத்தை பாலிவுட்டில் அஜய் கபூர் ரீமேக் செய்கிறார். இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள அவர், இந்த மென்மையான காதல் திரைப்படத்தை தேசியளவில் கொண்டுபோய் சேர்க்க விரும்புகிறேன். அதனால் 96 படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறேன். விரைவில் படக்குழு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று அவர் கூறினார்.
96 படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதற்கு விஜய் சேதுபதி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதுதொடர்பாக அவர் ட்விட்டரில், பார்வையாளர்களை கவரும் கதைகளை சொல்வது ஒரு நடிகராக எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதிகமான ரசிகர்களை அது சென்றடையும் போது ஏற்படும் மகிழ்ச்சி அளவில்லாதது. எனக்கு இனிமையான ஒரு அனுபவத்தை வழங்கிய 96 படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் அஜய் கபூருக்கு எனக்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக 96 திரைப்படம் கன்னடம் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. கன்னட மொழியில் கணேஷ் மற்றும் பாவனா இருவரும் நடித்திருந்தனர். தெலுங்கில் தயாரான பதிப்பில் ஷர்வானாந்த் மற்றும் சமந்தா நடித்திருந்தனர். இவ்விரு ரீமேக் படங்களுமே தமிழுக்கு இணையாக வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web