காவல் அதிகாரியான எஸ்.ஜே.சூர்யா பொய்களால் ஆன ஒரு வலையில் சிக்கிக்கொள்ளும் க்ரைம் த்ரில்லர் படம் விரைவில் அமேசான் ப்ரைம் ஒடிடியில்..!!
வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் புஷ்கர் மற்றும் காயத்ரி , ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கிய தமிழ் க்ரைம் த்ரில்லர் படம் , வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி.வெலோனி என்ற பெயரிடப்பட்ட பாத்திரத்தில் நடிக்கும் சஞ்சனாவும் இந்தத் தொடரில் முதல் முதலாக அறிமுகமாகிறார், மற்றும் லைலா, எம். நாசர், விவேக் பிரசன்னா, குமரன், மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் ஆகியோர் அடங்கிய ஒரு நட்சத்திரப்பட்டாளமே முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
. விமர்சன ரீதியாக பெரிதும் பாராட்டப்பட்ட சுழல் –தி வோர்டெக்ஸ் (Suzhal –The Vortex,) ஐத் தொடர்ந்து இந்த மயிர்க்கூச்செறிய வைக்கும் தமிழ் க்ரைம் த்ரில்லரை, புஷ்கர் (Pushkar) மற்றும் காயத்ரி (Gayatri) இருவரும் இணைந்து வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் பெயரில் தயாரிக்க ஆண்ட்ரூ லூயிஸ் (Andrew Louis) ஆல் உருவாக்கப்பட்டுள்ளது. எட்டு பகுதிகளைக் கொண்ட இந்த த்ரில்லர் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில், டிசம்பர் 2 ஆம் தேதி முதல் பிரைம் உறுப்பினர்களுக்கு இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் கிடைக்கும்.
கிசுகிசுக்கள் என்று பொருள்படும் வதந்தி என்ற தலைப்புக்கு இணங்க, இதன் அறிமுக நடிகையாக சஞ்சனா (Sanjana) ஏற்றுள்ள இளம் மற்றும் அழகு ததும்பும் வெலோனி என்ற கதாபாத்திரத்தின் வதந்திகளால் நிறைந்த ஒரு புதிரான உலகிற்கு இந்தக் கதைக்களம் உங்களை அழைத்துச் செல்கிறது. சற்று மனக்கலக்கத்துடன் ஆனால் மன உறுதியோடு கூடிய காவல் அதிகாரியான எஸ்.ஜே.சூர்யா (S.J. Suryah), பொய்களால் ஆன ஒரு வலையில் தான் சிக்குண்டுள்ளதை அறிகிறார், ஆனாலும் உண்மையைக் கண்டறிவதில் தன் விடா முயற்சியை தொடர்கிறார். ஓரு செல்வச் செழிப்பான அடுக்குகளால் ஆன ஒரு சிறிய நகரம் வெலோனியின் கதையை சிக்கலானதாக ஆக்கும் அதே சமயம் அதை ஒரு புதிரான விந்தைகள் நிறைந்ததாகவும் மாறசெய்கிறது. இந்த திரைப்படத்தில் லைலா(Laila) , எம். நாசர்,(M.Nasser), விவேக் பிரசன்னா (Vivek Prasanna), குமரன் (Kumaran), மற்றும் ஸ்மிருதி வெங்கட் (Smruthi VenkatLaila) போன்ற பிரபலமான நடிகர்களும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனியின் மூலமாக, பார்வையாளர்களின் கற்பனாசக்தியை முழுமையாக வெளிக்கொண்டுவந்து, சமூகத்தின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளை கேள்விக்குள்ளாக்குவதே எங்கள் நோக்கம். இந்தக் கதை பார்வையாளர்களை மகிழ்விப்பது மட்டுமல்லாமல், இறுதியில் நன்றியறிவிப்பு வெளியிட்ட பிறகும் நீண்ட நேரத்திற்கு அவர்களை சிந்தனை வயப்படுத்தும்" என்று இந்தத் தொடரின் படைப்பாளிகளான புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோர் தெரிவித்தனர்.
" எழுத்தாளர்-இயக்குனர்-படைப்பாளி என்ற பன்முகம் கொண்ட ஆண்ட்ரூ லூயிஸுடன் இந்த பரபரப்பான க்ரைம் த்ரில்லரை உருவாக்க ஒரு பொதுவான கண்ணோட்டத்தைப் பகிர்ந்து கொண்டு இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் அருமையாக உணர்ந்தோம். எஸ்.ஜே. சூர்யா போன்ற ஒரு மூத்த கலைஞர் தலைமையிலான ஒரு உன்னதமான திறமையுடன் கூடிய நட்சத்திரக் குழுவோடும் மற்றும் சஞ்சனா போன்ற புதிய அறிமுகங்களோடும் நிறைந்த இந்தத் தொடர் அதன் இறுதிக் காட்சி வரை ரசிகர்களை கட்டுண்டுகிடக்கச்செய்யும் .இந்த டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியிடப்படும் வதந்தி ரசிகர்களை நிச்சயமாகக் கவரும் என்று நாங்கள் நம்புகிறோம்.”