தந்தையாகிறார் பிரபல நடிகர்... குவியும் வாழ்த்துக்கள்..!!
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ராம் சரண். 2007-ம் ஆண்டு வெளியான ‘சிறுத்தை’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘மாவீரன்’ படத்தில் நடித்தார். இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது.அதன்பின் ஆரஞ்ச், ரச்சா, நாயக், ஜன்சீர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது சங்கர் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான தனி ஒருவன் படத்தின் ரீமேக்காக துருவா படத்தில் நடித்த ராம் சரண் மீண்டும் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் இந்த ஆண்டில் வெளியாகி இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்றது.
கடைசியாக தனது தந்தை மெகா ஸ்டார் சிரஞ்சீவி உடன் இணைந்து ராம்சரண் நடித்த ஆச்சார்யா திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. அடுத்ததாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருடன் இணைந்துள்ள ராம்சரண் ஆர்சி15 திரைப்படத்தில் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். இதனை அடுத்து இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கும் புதிய பிரம்மாண்ட படத்திலும் நடிக்கவுள்ளார்.
இதனிடையே நடிகர் ராம்சரண் அவர்கள் 2011-ம் ஆண்டு உபாசனா காமினேனி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதோடு இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இது குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி கொண்டே தான் இருந்தார்கள்.
இந்த நிலையில் இந்த செய்தியை நடிகர் சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் ராம் சரண் - உபாசனா ஜோடிக்கு ரசிகர்களுக்கு, திரை பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
— Chiranjeevi Konidela (@KChiruTweets) December 12, 2022