ஜிம்மில் ஒர்க் அவுட் செய்தபடியே சுருண்டு விழுந்து உயிரிழந்த பிரபல நடிகர்..! சோகத்தில் திரையுலகம்

 
1

இந்தி சின்னத்திரையில் பிரபல நடிகராக இருப்பவர் சித்தாந்த் சூர்யவன்ஷி. 46 வயதாகும் இவர் கடந்த 2001-ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

20-க்கும் அதிகமான மெகா சீரியர்கள், டிவி நிகழ்ச்சிகளில் இடம்பெற்று இந்தி சின்னத்திரை வட்டாரத்தில் நன்கு அறியப்படும் நபராக சித்தாந்த் உள்ளார். டெல்லியை சேர்ந்த இவர் ரஷ்யாவை சேர்ந்த சூப்பர் மாடல் அழகியான அலேஷியா ராவத்தை காதலித்து திருமணம் முடித்தார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் இவர் பிரபல தனியார் ஜிம் ஒன்றுக்கு தினசரி செல்வது வழக்கம். இந்த நிலையில்  ஜிம்மில் இவர் எடை தூக்கி பயிற்சி மேற்கொண்டு இருந்த போது மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. அங்கேயே இவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சித்தாந்தை காப்பாற்ற மருத்துவர்கள் போராடிய முயற்சி தோல்வியில் முடிந்து அவர் உயிரிழந்தார்.46 வயதே ஆன சித்தாந்த் வீர் சூர்யவன்ஷி உயிரிழந்தது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

நடிகர் ஜெய் பானுஷாலி, சித்தாந்த் வீரின் புகைப்படத்தை வெளியிட்டு, “விரைவாக சென்றுவிட்டாய்”என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். பல பிரபலங்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1
 

From Around the web