பிரபல நடிகரின் தந்தைக்கு மாரடைப்பு.. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..!

 
1

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றும் சவுத் இந்தியன் பிரின்ஸ் என்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் மகேஷ்பாபு. இவருக்கு ரசிகர் பட்டாளம்  ஏராளம். மகேஷ் பாபு சென்னையில் நடிகர் சிவராம கிருஷ்ணா மற்றும்இந்திரா தேவி தம்பதியருக்கு  மகனாக பிறந்தார். இவரது இளைய சகோதரர் ரமேஷ் பாபு திரைப்படத் தயாரிப்பாளராவார். சிறு வயதிலேயே தம் தந்தையின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர்  தனது 25ஆவது வயதில் ராஜகுமாருடு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

நடிகர் மகேஷ்பாபு தந்தை கிருஷ்ணா தெலுங்கு சினிமாவில் மூத்த முன்னணி நடிகராவர். 79 வயதான இவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக அவரை குடும்பத்தினர் ஹைதாரபாத் கச்சி பவுலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு தற்போது ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

1

இந்த நிலையில் சற்றுமுன் தனியார் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் கிருஷ்ணா அவர்கள் இன்று அதிகாலை 1.15 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அவருக்கு மாரடைப்பு நோய் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் அவர் உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர் குழு சிகிச்சை அளித்து வருவதாக கூறுகிறது. தற்போதைய நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் வென்டிலேட்டர் உள்ளிட்ட சிகிச்சை வசதி அவருக்கு செய்யப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

1

இதய நிபுணர்கள், நரம்பியல் நிபுணர் உள்பட மருத்துவ குழு ஒன்று அவருடைய உடல் நிலையை 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகர் கிருஷ்ணா விரைவில் குணமடைய வேண்டும் என மகேஷ்பாபுவின் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


 


 

From Around the web