படப்பிடிப்பில் ஏற்பட்ட தீ விபத்து ..! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பிரபல நடிகை..!!

 
1

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் மௌனி ராய். சினிமாவில் நடித்து வந்த அவர், 'நாகினி' சீரியல் மூலம் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்தார். இச்சதாரி பாம்புகளின் கதைக்களத்தை கொண்ட இந்த சீரியல் ஷிவாணி என்ற கதாபாத்திரத்தில் மெளனி ராய் நடித்திருந்தார்.இந்தியில் எடுத்து ஒளிப்பரப்பான இந்த சீரியல் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு ஒளிப்பரப்பானது. இந்த சீரியலில் மெளனியின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்நிலையில் இவர் தற்போது தி விர்ஜின் ட்ரீ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் .பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இந்த படத்தின் வழியே தயாரிப்பாளர் ஆகியுள்ளார். இதுதவிர, சன்னி சிங் மற்றும் பாலக் திவாரி உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. 

சம்பவம் நடந்தபோது, நடிகை மவுனி ராய்  அவருக்கான சீன் எடுக்கப்பட இருந்தது. அப்போது, கேமிரா வெடித்து தீ பரவியுள்ளது. எனினும், இந்த சம்பவத்தில் அவர் உயிர் தப்பி விட்டார். யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கின்றது. தீ விபத்தினால் படப்பிடிப்பு 2 மணிநேரம் வரை ஒத்தி வைக்கப்பட்டது. இதன்பின்னர் தீயணைப்பு வீரர்கள் தகவல் அறிந்து உடனடியாக வந்து நெருப்பை அணைத்தனர். எனினும், படத்திற்காக போடப்பட்ட செட் 20 முதல் 30 சதவீதம் அளவுக்கு தீ விபத்தில் சேதமடைந்து விட்டது.
 

From Around the web