இங்கு நிறையா பலி, பூஜை எல்லாம் நடக்கிறதாம்...அப்படியா..!! - கலையரசனின்  'எஸ்டேட்' பட டிரைலர் வெளியானது..!

 
1

டிவைன் புரொடக்சன்ஸ் சார்பில் வெங்கடேஷ் தயாரித்துள்ள 'எஸ்டேட்' திரைப்படத்திற்கு அஷ்வந்த் ராஜன் தயாள் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரகாஷ் கருணாநிதி படத்தொகுப்பு செய்துள்ளார். பாடல்கள் மற்றும் பின்னணி இசையை குணா பாலசுப்ரமணியம் அமைத்துள்ளார். இந்த படத்தில் கலையரசன், ரம்யா நம்பீசன் மற்றும் சுனைனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் நடிகர் அசோக் செல்வன் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

இந்த படம் முழுவதும் ஏற்காட்டில் இரவில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. டிரைலர் படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகப்படுத்தியுள்ளது. இந்த திரைப்படம் வருகிற 9-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

From Around the web