பிரிகிடா பேச்சால் எழுந்த புதிய சர்ச்சை..! மன்னிப்பு கேட்ட நடிகர் பார்த்திபன்..!!

 
1

சமீபத்தில் வெளியாகி அனைத்துதிரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் இரவின் நிழல். இந்த படத்திற்காக நடிகர் பார்த்திபன் பல விதங்களில் ப்ரோமோஷன் செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது பார்த்திபன் மற்றும் நடிகை பிரிகிடா ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் பல தியேட்டர்களுக்கு சென்று ரசிகர்களை நேரில் சந்தித்து படத்திற்கு அவர்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி கூறி வருகின்றனர்.

1

இந்நிலையில் பிரிகிடா ஒரு திரையரங்கில் செய்தியாளர்களிடம் பேசும்போது அதில் 18 வயதுக்குட்பட்டோர் பார்க்க வேண்டிய படங்களை அனைவரும் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். இந்த படத்தில் அவ்வளவு கெட்ட வார்த்தை இருக்கக் கூடாதுதான். இந்த படத்தின் கதைப்படி, ஒருவனுக்கு கெட்டது மட்டுமே நடந்துள்ளது. அதனால் அவனது வாழ்க்கையை அப்படிதான் சொல்லமுடியும். ஒரு சேரி போனால் கெட்ட வார்த்தைகள் மட்டுமே கேட்கமுடியும். இதை சினிமாவிற்காக ஏமாற்றமுடியாது. மக்களுக்கே தெரியும் அங்கு போனால் எப்படி பேசுவாங்கன்னு. அதை தவிர்க்கவே முடியாது. கதைக்காக அப்படி திரைப்படம் உருவாகியுள்ளது என்று கூறினார். தற்போது இந்த பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சேரி மக்கள் பற்றி நடிகை ஒருவர் இவ்வாறு பேசியதற்கு சமூக வலைத்தளங்களில் பலத்த கண்டனம் எழுந்தது. இதனால் நடிகை பிரிகிடா ட்விட்டர் பதிவின் மூலம் பகிரங்க மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

“இடத்தை பொறுத்து மொழி மாறும் என்பதை தான் நான் கூற வந்தேன்..” என்று குறிப்பிட்டுள்ளார் நடிகை பிரிகிடா.


 

From Around the web