வாரிசு படத்திற்கு வந்த புது பிரச்சனை..!! 

 
1

இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் வாரிசு என்ற படத்தில் நடித்துள்ளார். 2023 பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் நேரடியாக வெளியிடப்படுகிறது. பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ளார்.இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இந்த படத்தின் மூலம் விஜய் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

1

இந்நிலையில், வாரிசு படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் பிரம்மாண்டமாக செட் போட்டு 100க்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் 5 யானைகள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டு வருவதாக பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. 

சட்டப்படி சினிமாவில் விலங்குகள் மற்றும் பறவைகள் அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது என்றும் தங்களுக்கு வந்துள்ள புகார் தொடர்பாக வாரிசு படத்தின் தயாரிப்பு நிறுவனமான வெங்கடேஷ்வரா கிரியேஷனுக்கு மற்றும் தில் ராஜுவுக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது  தொடர்பாக 7 நாட்களில் விளக்கம்  அளிக்க வேண்டும்’ என படக்குழுவிற்கு அதிரடியா நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதற்குமுன் மெர்சல் படத்தில் விஜய் புறாவை பயன் படுத்தியதால் அதற்க்கு ஒரு சிக்கல் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

1

From Around the web