சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள செல்லம்மா நடிகர் மீது சீரியல் நடிகை கொடுத்த புகார்..!!

 
1

சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி சீரியல் மூலம் மிகவும் பிரபலமான பெங்களூரைச் சேர்ந்த திவ்யா ஸ்ரீதர் மற்றும் தமிழகத்தை சேர்ந்த நடிகர் அர்ணவ் ஆகிய இருவரும் சீரியலுக்கு அப்பாலும் நட்பை வளர்த்து வந்துள்ளனர்.

நாளடைவில் இது காதலாக மாற கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.  அதனைத்தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு அர்னாவ்வும், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்த ஜோடிக்கு திருமணமானதே தெரியாமல் இருந்த நிலையில்,   அந்த புகைப்படங்களை சில வாரங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திவ்யா ஸ்ரீதர் வெளியிட்டு இருந்தார் . அத்துடன் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அவர் தெரியப்படுத்தினார்.  இதையடுத்து திவ்யா - அர்னாவ்   தம்பதிக்கு   வாழ்த்துகள் குவியத்தொடங்கின..  

1

இந்நிலையில் செல்லமா சீரியலில் நடித்து வரும் நடிகையுடன் அவர் நெருக்கமாக உள்ளார் . எங்கள் திருமணம் குறித்து அறிவிப்பை நாங்கள் வெளியிடாமல் இருந்த நிலையில் அவர் செல்லமா சீரியல் நடிகை உடன் நெருக்கம் காட்டியதால் நான் அது குறித்து அறிவிப்பை வெளியிட்டேன்.  இதிலிருந்து  அர்னாவ் என்னை சந்திப்பதில்லை.  என்னை பிளாக் செய்துவிட்டார்.  அத்துடன் செல்லம்மா  சீரியல் நடிகையும் தன்னை டார்ச்சர் செய்து வருகிறார்.  திருமணமானதை வெளியில் சொல்ல வேண்டாம் என்பதை தொடர்ந்து அவர் வலியுறுத்தினார்.  ஆனால் அவனும் அந்த பெண்ணும் நெருக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்ததால் நான் உண்மையை வெளியிட்டேன்.

தற்போது நான் கர்ப்பமாக இருக்கிறேன். கர்ப்பமாக இருப்பது தெரிந்தும் அவர் தொடர்ந்து என்னை டார்ச்சர் செய்கிறா.ர் என்னை அடித்து மிதித்து கொடுமைப்படுத்துகிறார்.  இதையெல்லாம் செல்லம்மா சீரியல் ஹீரோயின் பார்த்து ரசிக்கிறார். என்னுடைய வயிற்றில் அடிப்பட்டு விட்டது .தான் தற்போது கேஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். தனக்கு எப்போது வேண்டுமானாலும் அபார்ஷன்  ஆகலாம் என மருத்துவர்கள் சொல்கிறார்கள்.  நான் எல்லாமே  அர்னாவ்விற்காக தான் செய்தேன். அவருக்காக முஸ்லிமாக மதம் மாறிக்கொண்டேன்.  எனது கணவர் எனக்கு வேண்டும்.  எவ்வளவு கொடுமைப்படுத்தினாலும் அவருக்காக நான் காத்திருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

1

இது சின்னத்திரையில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அர்ணவ், திவ்யாவின் குற்றச்சாட்டை மறுத்ததோடு, 3 மாத கர்ப்பத்தை கலைப்பதற்காக திவ்யா வேண்டுமென்றே நாடகம் ஆடுவதாகக் கூறி ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டும் நிலையில், யார் சொல்வது உண்மை என்பது தெரியாமல் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From Around the web