10..15 வருஷத்துக்கு முன்னாடி நம்ம ஊர்ல இதே மாதிரி ஒரு சம்பவம் நடந்துச்சு... மிரட்டலாக வெளியான மிரள் ட்ரைலர்..!!   

 
1

நீண்ட காலமாக சினிமாவில் இருந்து வரும் பரத் தனக்கென தனி இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்து முயற்சித்து வருகிறார். 

தற்போது பரத் அறிமுக இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் மிரள் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் வாணிபோஜன் கதாநாயகியாக நடித்துள்ளார்.  ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், காவ்யா, ராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் பாடல்களே இல்லாமல் உருவாகிறது. படத்தின் முழு கதையும் ஒரு காற்றாலை பண்ணையின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த படம் வரும் நவம்பர் 11-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு சொந்த கிராமம் திரும்பும் பரத் மற்றும் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் திகில் அனுபவங்கள் தான் இப்படத்தின் கதை. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. 

From Around the web