வெந்து தணிந்தது காடு நடிகை  சொன்ன குட்டி ஸ்டோரி..!! அப்பா ரஜினிகாந்த்... அண்ணன் உதயநிதி...காதலன் சிம்பு...!! 

 
1

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து நேற்று முன்தினம் உலகெங்கும் வெளியான படம் தான்  'வெந்து தணிந்தது காடு' . இந்த படத்தில் சித்தி இட்னானி கதாநாயகியாக நடித்து வருகிறார்.மும்பை சேர்ந்த இவர், கௌதம் மேனன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டார். இந்த படத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவில் சித்தி இத்நானிக்கு படவாய்ப்புகள் குவிய தொடங்கியுள்ளன. அந்த வகையில் சசி இயக்கத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.இதுதவிர தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருகிறார். 

இதனிடையே படத்தின் ஹீரோயின் சித்தி இட்னானி பிரபல இணைய ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அதில் சினிமா பயணம் குறித்த பல விஷயங்களை தெரிவித்துள்ளார். நான் மாநில அளவில் எறிபந்து வீராங்கனை. ஆனால் மாடலிங் செய்து சினிமாவுக்கு வந்தேன். எனக்கு விளையாட்டு தவிர்த்து பாடவும் தெரியும் என கூறியுள்ளார்.

1

அப்போது தொகுப்பாளர் சிலம்பரசன், ரஜினிகாந்த், சித்தி விநாயகர் கோவில், FDFS, முதல்வர் ஸ்டாலின் ஆகிய 5 வார்த்தைகளை பயன்படுத்தி கதை ஒன்றை சொல்லுமாறு கூறுகிறார். இதனையடுத்து கதை சொல்ல தொடங்கும் சித்தி, என்னுடைய அப்பா ரஜினிகாந்த். அவர் எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடிவு செய்கிறார். அப்பாவும் உதயநிதி ஸ்டாலினும் நண்பர்கள். இருவரும் என் கல்யாணம் குறித்து பேசுகிறார்கள். அப்போது உதயநிதி, என்னுடைய தம்பி ஒரு பெண்ணை காதலிக்கிறார். இல்லையென்றால் அவனுக்கே உங்கள் மகளை கல்யாணம் செய்து வைத்திருப்பேன் என ரஜினியிடம் கூறுகிறார்.

1

உடனே நான் சென்று அப்பாவிடம் ஒரு பையனை காதலிப்பதாகவும், என்னை கல்யாணம் செய்ய சொல்லி கட்டாயப்படுத்த வேண்டாம் என தெரிவிக்கிறேன். அதற்கு சரி என சொல்லி மீட் பண்ண வர சொல்கிறார். நானும் சிம்புவும் சிறு வயதில் இருந்தே காதலித்து வருகிறோம். அவரை கொண்டு வந்து எங்க அப்பாவிடம் அறிமுகப்படுத்திய போது சிம்புவுக்கு ஓகே சொல்கிறார். சிம்பு எங்கள் அண்ணனிடம் கேட்டு சொல்கிறேன் என கூறுகிறேன். அந்த அண்ணன் தான் உதயநிதி ஸ்டாலின். எங்கள் இருவருக்கும் சித்தி விநாயகர் கோவிலில் திருமணம் நடக்கிறது என அந்த கற்பனை கதையை கூறுகிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இந்த கதையை பார்த்தால் கற்பனை மாதிரி தெரியவில்லை என கூறி கலாய்த்து வருகின்றனர்.

From Around the web