சூர்யா ரசிகர்களுக்கு நாளை ஒரு ஸ்பெஷல் ட்ரீட் காத்திருக்கு..!!  

 
1

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா உடன் புதிய படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகும் இந்த படத்தை யூவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடீயோ க்ரீன் இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன. இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருக்கிறார்.

மாயாவி, ஆறு, சிங்கம் 1, சிங்கம் 2 ஆகிய படங்களை அடுத்து ஐந்தாவது முறையாக தேவி ஸ்ரீ பிரசாத், சூர்யா படத்திற்கு இசையமைக்கிறார். பாலிவுட் நடிகை திஷா பதானி இந்தப் படத்தில் கதாநாயகியாக இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.  யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா மற்றும் ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

‘சூர்யா 42’ இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டு 10 மொழிகளில் வெளியாகும் மிகப்பெரிய அளவிலான திட்டமாகும்.  சிறுத்தை சிவாவின் அசோசியேட் ஆதி நாராயணா இப்படத்தின் எழுத்தாளராக பணியாற்றுகிறார், மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார்.


 

From Around the web