பிரபல யூடியூபர் மதன் கௌரி ரசிகர்களுக்கு ஒரு ஸ்வீட் சப்ரைஸ்..!!
யூடியூப் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் மதன் கௌரி. ஆரம்பத்தில் விக்கிப்பீடியா தகவல்களை அப்படியே வாசிப்பதாக பலரால் விமர்சிக்கப்பட்டாலும் தற்போது பல தடைகளை தாண்டி முன்னேறி கொண்டிருக்கிறார். சமூகத்தின் நிகழ்வுகள், முக்கிய தகவல்கள், பகீர் குபீர் சம்பவங்கள், மர்ம, அமானுஷ்ய விஷயங்கள் போன்றவைகளை, விலாவரியாக மக்களுக்கு எடுத்து சொல்பவர் யூடியூபர் மதன் கௌரி.எவ்வளவு பெரிய கடினமான சம்பவங்களைகூட, அனைத்து தரப்பு மக்களுக்கும் புரியும் வகையில் விளக்கி தொகுத்து வீடியோவாக வெளியிடுவார் ..
அதிலும், குற்ற சம்பவங்களை மையமாக கொண்டு, இவர் வெளியிட்ட பல வீடியோக்கள், மில்லியன் பார்வையாளர்களை கடந்து செல்வது வழக்கம்.. இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளத்தில், இளைஞர்களே பெரும்பாலானவர்கள்..
இந்நிலையில் , பிரபல யூடியூபரான மதன் கௌரி புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.
‘ஒரு கல்லூரியின் கதை’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நந்தா பெரியசாமி.. முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு மாத்தி யோசி, ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார்.
இதையடுத்து ‘தேடி தேடி பாத்தேன்’ என்ற தலைப்பில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தில் பிரபல யூடியூபர் மதன் கௌரி கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் ஸ்ரீரிதா ராவ் கதாநாயகியாக நடிக்கிறார். தாரன்குமார் இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு கே.ஏ ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இது வரவேற்பை பெற்றுள்ளது.