சினிமாவில் இருந்து ஒய்வு பெரும் பிரபல பாலிவுட் நடிகர்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!!

ஹாலிவுட்டில் ஆஸ்கர் விருதுகளை வாங்கிய ஃபாரெஸ்ட் கம்ப் என்ற படத்தை அதிகாரப்பூர்வமாக லால் சிங் சத்தா என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்து, அதில் நடிகர் ஆமிர் கான் ஹீரோவாக நடித்திருந்தார்.
இதற்கு முன்பாக ஆமிர் கான் நடிப்பில் வெளிவந்த தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், லால் சிங் சத்தா ஆஸ்கர் விருதுகளை குவித்த படத்தின் ரீமேக் என்பதால் ரசிகர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. உதயநிதி ஸ்டாலின் ரெட்ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தமிழில் வாங்கி வெளியிட்டது.
ஆனால் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. மிகப்பெரும் பொருட் செலவுடன் எடுக்கப்பட்ட இந்தப் படம், படுதோல்வியை சந்தித்தது ரசிகர்களை மட்டுமல்லாது பாலிவுட் திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
லால் சிங் சத்தா கொடுத்த அதிர்ச்சியில் இருந்து விலகாமல் தனித்திருந்து, செய்தியாளர் சந்திப்பை தவிர்த்து வந்த ஆமிர்கான், நேற்று பேட்டி அளித்தார். அப்போது சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கியிருக்கப் போவதாக கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.
சுமார் 35 ஆண்டுகாலம் சினிமாவில் இருந்து வரும் ஆமிர் கான் எப்போதும் இந்த அளவிற்கு மனவருத்தம் அடைந்தது கிடையாது எனக் கூறப்படுகிறது. ஆனால் லால் சிங் சத்தா அவரது மன உறுதியை அசைத்து பார்த்துவிட்டதாகக் கூறப்படும் நிலையில், விரக்தியில் சில காலம் சினிமாவுக்கு ஓய்வு கொடுக்க முடிவெடுத்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.