நடிகர் அஜித் ரசிகரை பார்த்து கிண்டலாக கலாய்த்திருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல்..!!

 
1

 ‘பிரேம புஸ்தகம்’ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார் நடிகர் அஜித். 1993-ல் செல்வா இயக்கதில் வெளியான ‘அமராவதி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதில் பவித்ரா திரைப்படம் இவருக்குக் குறிப்பிடத்தக்க திரைப்படமாக அமைந்தது. 

Ajith

அதன் பின்னர் 1995-ல் வெளியான ‘ஆசை’ திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து காதல் மன்னன், அவள் வருவாளா, வாலி, வில்லன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், அட்டகாசம், வரலாறு, பில்லா, மங்காத்தா, வீரம், விவேகம், வேதாளம், கடைசியாக வெளியான வலிமை படம் வரை தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இன்றளவும் திகழ்கிறார். 

Ajith

தற்போது ஏகே 61 பட ஷூட்டிங்கில் இருந்து சற்று இடைவெளி எடுத்துக்கொண்டு லடாக் காஷ்மீர் பகுதிகளில் பைக் ரெய்டில் சாகசம் செய்து வருகிறார் தல அஜித் குமார். இந்த புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஏகே 61 படத்தின் நாயகி மஞ்சு வாரியரும் அஜித்துடன் இணைந்து சாகச பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். 

இந்த நிலையில் தல அஜித்தை தொடர்ந்து பின் சென்று ரசிகர்கள் பேசியுள்ள காணொளி தற்போது வெளியாகியிருக்கிறது. கோவையிலிருந்து அஜித்தை பின்தொடர்ந்து லடாக் வரை ரசிகர்கள் வந்துள்ளனர். அஜித்தை மூன்று நாட்களாக தேடிக் கொண்டிருப்பதாக கூறுகின்றனர். அவர்களைப் பார்த்த அஜித் ஹெல்மெட்டை கழற்றிவிட்டு அவர்களிடம் பேசுகிறார்.

மூன்று நாட்களாக உங்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம் என்று அஜித்திடம் அந்த இளைஞர்கள் கூற, தேடிக் கொண்டிருந்தீர்களா? நான் என்ன கொலைகாரனா அல்லது கொள்ளைக்காரனா என்று கிண்டலாக கேட்டார். மேலும் அந்த இளைஞர்களிடம் பயண விவரங்களை கேட்டறிந்தார்.


இந்த வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது. மேலும் ஏகே 61 படத்திற்காக அஜித்துடன் இணைந்து படக்குழுவினர் தாய்லாந்து செல்ல உள்ளனர். அங்கு சில சண்டை காட்சிகள் எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த மாதத்திற்குள் படப்பிடிப்புகள் நிறைவு பெற்று போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெறு.ம் பொங்கலுக்கு விஜயின் வாரிசு உடன் ஏகே 61 மோத உள்ள அதிக வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.

From Around the web