நடிகர் அஜித்தின் மகளுக்காக ரப்பர் டையர் ஓட்டிய வீடியோ இணையத்தில் வைரல்..!! 

 
1

நடிகர் அஜித்தின் மூத்த மகள் அனோஷ்கா என்பதை நாம் அனைவரும் அறிவோம். பொதுவாக நடிகர் அஜித்தின் புகைப்படம் அல்லது அவரது குடும்பத்தினர் புகைப்படங்கள் எப்போது சமூக வலைதளங்களில் வெளியானாலும் அது உடனடியாகவே வேறலெவலில் டிரெண்டாகி விடும்.

நடிகர் அஜித் சில ஆண்டுகளுக்கு முன் தனது மகளுக்காக, மகளின் பள்ளியின் நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்டு சைக்கிள் ரப்பர் டையரை ஓட்டினார்.இந்த போட்டியில் அவர் வெற்றிபெறவில்லை என்றாலும், அந்த வீடியோ வெளிவந்து நம் அனைவரின் மனதையும் வென்று விட்டார் என்று தான் கூறவேண்டும்.

இந்நிலையில் நடிகர் அஜித் தனது மகளுக்காக அவரது பள்ளியில் டயர் ஓட்டிய வீடியோக்கள் எல்லாம் டிரெண்டாகின. சின்னக் குழந்தையாக இருந்த அனோஷ்கா கிடுகிடுவென தற்போது வளர்ந்து உள்ள நிலையில், அவரது புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.அம்மா மற்றும் சித்தி ஷாமிலி உடன் அனோஷ்கா இருக்கும் ஒரு புகைப்படத்தில் அம்மா ஷாலினியோட ரொம்ப ஹைட்டாகவும் சித்தி ஷாமிலி ஹைட்டுக்கு சீக்கிரமே போட்டி போடும் அளவுக்கு இருக்கும் அனோஷ்காவின் புகைப்படம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

1

நேற்று அஜித்தின் மகள் அனோஷ்காவிற்கு பிறந்தநாள் என்பதினால் இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.


 


 

From Around the web