‘ஏகே61’ படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

 
1

‘வலிமை’ படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் மீண்டும் இயக்குநர் எச்.வினோத்துடன் இணைந்துள்ளார். இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படம் ‘ஏகே61’ என அழைக்கப்படுகிறது. அஜித் ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஜான் கொக்கென், வீரா, யோகிபாபு, மகாநதி சங்கர் போன்ற பலர் நடிக்கின்றனர்.

Ajith

ஐதராபாத்தில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்ட முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டன. வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு க்ரைம், த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டது என தகவல் வெளியாகியது.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பாங்காங்கில் நடைபெறவுள்ளது. விரைவில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைய உள்ள நிலையில், இன்று மாலை இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. அதேபோல படத்தின் தலைப்பு ‘துணிவு’ அல்லது ‘துணிவே துணைய இரண்டில் ஒன்றாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. படத்தின் தலைப்பாக ‘துணிவு’ என்று வைக்கப்பட்டுள்ளது. மேலும், கையில் துப்பாக்கி உடன் அஜீத் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருப்பது போன்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தின் போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


 

From Around the web