மிக எளிமையாக நடந்த இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் மகள் திருமணம்!!

 
1

.தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக விளங்குபவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். இவருக்கு அமீன் என்ற மகனும், ரஹீமா, கதீஜா என்கிற மகள்களும் உள்ளனர்.

1992-ம் ஆண்டு மணிரத்தின் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழ் சினமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். தற்போது பொன்னியின் செல்வன், அயலான், கோப்ரா, இரவினில் நிழல் உள்ளிட்ட படங்களில் இசையமைத்து வருகிறார்.

ஏ ஆர் ரகுமான்

கடந்த சில நாட்களுக்கு முன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தனது மூத்த மகள் கதீஜாவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக அறிவித்து இருந்தார். இதுபோக தன்னிடம் சவுண்ட் என்ஜினியராக பணியாற்றிய ரியாசுதீன் ஷேக் முகமது என்பவரை, தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க போவதாக அறிவித்திருந்தார்.

ஏ ஆர் ரகுமான்

இந்நிலையில், கதீஜா - ரியாசுதீன் ஷேக் முகமது திருமணம் நேற்று எளிமையான முறையில் நடந்து முடிந்நு உள்ளது. இந்த விழாவில் ஏ.ஆர்.ரகுமானின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டு உள்ளனர்.

ஏ ஆர் ரகுமான்

மணமக்களுடன் ஏ ஆர் ரகுமான் நடித்த குடும்ப புகைப்படம், சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும், மணமக்களுக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்

From Around the web