இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்தது போல் வெற்றிமாறன் படப்பிடிப்பில் விபத்து... சண்டை பயிற்சியாளர் பலி!!

 
1

அசுரனை அடுத்து சூரியை ஹீரோவாக வைத்து புதிய திரைப்படத்தை இயக்குகிறார் வெற்றி மாறன். இதுவரை காமெடியனாக பார்த்து வந்த சூரியை வெற்றிமாறன் இயக்கும் படத்தின் மூலம் ஹீரோவாக பார்க்க இருக்கின்றனர். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.

Viduthalai

இதில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் மேக்கிங் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

viduthalai

இந்நிலையில் சென்னை கேளம்பாக்கத்தில் நடைபெற்று வந்த 'விடுதலை' படத்தின் படப்பிடிப்பின்போது ரோப் கயிறு அறுந்து விழுந்து சுரேஷ் என்ற சண்டை பயிற்சியாளர் உயிரிழந்துள்ளார். ரோப் கயிறு அறுந்ததில் கீழே விழுந்ததில் படுகாயமடைந்த சண்டை பயிற்சியாளர் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரழந்துள்ளார். இந்த விபத்து படக்குழுவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்கெனவே கிரேன் அறுந்து விழுந்து இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், மீண்டும் அது போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.

From Around the web