விரைவில் அமேசான் ப்ரைமில் வெளியாகிறது 'ஆச்சார்யா'..!!

 
1

கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி ராம்சரண் & சிரஞ்சீவி நடிப்பில்  வெளியான ஆச்சார்யா படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. கொரட்டாலா சிவா இயக்கியுள்ள இந்த படத்துக்கு மணி ஷர்மா இசையமைத்துள்ளார். பூஜா ஹெக்டே இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

ஆச்சார்யா திரைப்படம் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.இதனால் படத்தை வாங்கி வெளியிட்ட  விநியோகஸ்தர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தற்போது அமெரிக்காவில் இருக்கும் சிரஞ்சீவி இந்தியா திரும்பியவுடன் இழப்பீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது 

1

இதையடுத்து இந்த படம் தற்போது ஓடிடியில் வெளியாகவுள்ளது . பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் ப்ரைமில் வரும் மே 20 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 

From Around the web