வரும் 18 ஆம் தேதி நடிகர் ஆதி - நிக்கி கல்ராணி திருமணம்!
Sat, 7 May 2022

யாகவராயினும் நாகாக்க, மரகதநாணயம் படங்களில் நடித்த போது நடிகர் ஆதி, நடிகை நிக்கி கல்ராணி இடையே பழக்கம் ஏற்பட்டது.பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கினர்.
இவர்களது நிச்சயதார்த்தம் மார்ச் மாதம் நடைபெற்றது. இந்நிலையில் வருகிற மே 18ல் சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் திருமணம் பிரம்மாண்டமாய் நடைபெற உள்ளது.
அன்று மாலை 7 மணியளவில் வரவேற்பு நிகழ்வும், தொடர்ந்து திருமணம் தொடர்பான சம்பிரதாயங்கள் நடக்கின்றன.