சூட்டிங் பண்ண திருச்சிக்கு வந்த நடிகர் அஜித்குமார்... இது சினிமா ஷூட்டிங் இல்ல..!!

 
1

திருச்சியில் 47-வது மாநில துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த ஜூலை 25-ம் தேதி தொடங்கியது. இந்த மாநில துப்பாக்கிச் சுடும் போட்டி, திருச்சி மாநகரத்தில் உள்ள கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வரும் ரைபிள் கிளப்பில் நடைபெறுகிறது. 
 
இந்த போட்டியில், தமிழகம் முழுவதும் இருந்து துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற சுமார் 1,300 போட்டியாளர்கள் பங்கேற்றனர். மேலும், இப்போட்டியில் சிறியவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என வயது அடிப்படையில் பிரிக்கப்பட்டு 16, 19, 21 ஆகிய வயதுக்கு உள்பட்ட பிரிவினருக்கும், 21 முதல் 45 வயது மற்றும் 45 முதல் 60 வயது மற்றும் 60 வயதுக்கு மேல் உள்ள பிரிவினருக்கு என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, பிஸ்டல் துப்பாக்கி சுடுவதற்கான போட்டியாளர்களுக்கு 28-ம் தேதி வரை போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படுகிறது. ஜூலை 29-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ரைபிள் துப்பாக்கி சுடுபவர்களுக்கான போட்டிகள் நடைபெறுகிறது.

இந்நிலையில், மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் நேற்று (ஜூலை 27) தமிழ் திரைப்பட நடிகரான அஜித்குமார் பங்கேற்றார். 

1

From Around the web