பதக்க மழையில் நடிகர் அஜித்குமார்..!!

 
1

திருச்சியில் 47-வது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த ஜூலை 25-ம் தேதி தொடங்கியது.  மாநில துப்பாக்கி சுடும் போட்டியானது , திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வரும் ரைபிள் கிளப்பில் நடைபெறுகிறது. இதில், தமிழகம் முழுவதும் இருந்து துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற சுமார் 1,300 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். 

இப்போட்டியில் சிறியவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என தரம் பிரிக்கப்பட்டு 16, 19, 21 ஆகிய வயதுக்கு உட்பட்ட பிரிவினருக்கும், 21 முதல் 45 வயதுக்கு உட்பட்ட பிரிவினருக்கும், 45 முதல் 60 வயது மற்றும் 60 வயதுக்கு மேல் உள்ள பிரிவினருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படுகிறது.

மேலும், கடந்த ஜூலை  24-ம் தேதி தொடங்கிய இப்போட்டிகள் ஜூலை 31 வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், மாநில துப்பாக்கிச் சுடும் போட்டியில் கடந்த 27-ம் தேதி தமிழ்த் திரைத்துறையின் உச்ச நடிகர்களுள் ஒருவரான அஜித்குமார் பங்கேற்றார். 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் என மூன்று சுடுதளத்திலும், பிஸ்டல் பிரிவு போட்டிகளில் இவர் கலந்துகொண்டார். 

இந்நிலையில், இதுவரை நான்கு தங்கப்பதக்கங்கள் மற்றும் இரு வெண்கல பதக்கங்கள் என ஆறு பதக்கங்களை நடிகர் அஜித்குமார் வென்றுள்ளார். 

அவை: 

  • சென்டர் பயர் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவு – ஒரு தங்கப்பதக்கம்
  • ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவு – ஒரு தங்கப்பதக்கம்
  • 50 மீட்டர் பிரீ பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவு – ஒரு தங்கப்பதக்கம்
  • ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவு – ஒரு தங்கப் பதக்கம்
  • 50 மீட்டர் பிரீ பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவு – வெண்கல பதக்கம்
  • ஸ்டாண்டர்டு பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவு –  வெண்கல பதக்கம்.

மேலும், திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், குறு விமானங்களை தயார் செய்வதற்கான ஆலோசகராகவும் அஜித்குமார் இருந்துள்ளார். திரைப்படங்களைப் பொறுத்தவரையில், அஜித்குமார் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

From Around the web