பயணத்தை முடிவு செய்த நடிகர் அஜித்..!! 

 
1

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் நடிப்பு மட்டுமில்லாமல் கார் ரேஸிங், பைக் ரைடிங், குக்கிங், துப்பாக்கி சுடுதல், ஏரோநாட்டிக்கல் மற்றும் ட்ரோன் பில்டிங் என பன்முகத்திறமை கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. இதில் நீண்ட நாட்களாக மிகுந்த ஆர்வம் காட்டி வருவது பைக் தான். 

ajith

கடைசியாக 'வலிமை' படத்தை அஜித் தனது உலக பைக் பயணத்தை தொடங்கினார். ஏற்கனவே ஐரோப்பா நாட்டில் பல ஆயிரம் கிலோமீட்டர் பைக் பயணம் செய்து சாதனை படைத்தார். இதையடுத்து 'துணிவு' படப்பிடிப்பிற்கு நடுவே தனது இந்திய பைக் பயணத்தை தொடங்கினார். இதையொட்டி காடு, மலை என பல ஊர்களுக்கு பல்லாயிரம் கிலோமீட்டர் பைக் பயணம் மேற்கொண்டார். 

ajith

இந்நிலையில் நடிகர் அஜித் தனது இந்திய பைக் பயணத்தை இன்று நிறைவு செய்துள்ளார். தான்  பைக் பயணம் மேற்கண்ட மாநிலங்களின் வரைபடம் ஒன்றையும் அஜித் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். துணிவு இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என ரசிகர்கள் அஜித்தை உற்சாகப்படுத்தும் விதமாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

ajith

From Around the web