நடிகர் அஜித்தை வம்புக்கு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்..!! கொந்தளிப்பில் அஜித் ரசிகர்கள்

ப்ளூ சட்டை மாறன் முதலில் படங்களை விமர்சித்து வந்தார் போகப் போக அந்த நடிகர்களையும் விமர்சிக்க தொடங்கினார் குறிப்பாக விஜய் – அஜித்தை பெரிதும் தாக்கி பேசி வருகிறார். அண்மையில் வெளிவந்த பீஸ்ட், வலிமை, பொன்னியின் செல்வன், இரவின் நிழல் போன்ற படங்களை பெரிதும் கலாய்த்து தள்ளினார்
இதனால் கோபமடைந்த ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை வச்சி செய்தனர். பல ஆண்டுகளாக ரசிகர்களுக்கும், ப்ளூ சட்டை மாறனுக்கும் பிரச்சனை நடந்து கொண்டே தான் இருக்கிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் மீண்டும் ஒரு பிரச்சனையை கிளப்பி உள்ளார். ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் வலிமை படத்தின் டிரைலரை 25 மில்லியன் பேர் பார்த்து உள்ளனர் என பதிவிட்டார் மேலும் சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் சரவணன் அருள் தி லெஜன்ட் என்ற படத்தில் நடித்து அறிமுகமானார் இந்த படத்தின் டிரைலர் வெளிவந்து 32 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது என கூறி..DO NOT UNDERESTIMATE THE POWER OF ANNACHI என குறிப்பிட்டு உள்ளார் இது தற்பொழுது அஜித் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது