துணிவு பட லுக்கில் ரசிகர்களை சந்தித்த நடிகர் அஜித்..!!

 
1

எச்.வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் ‘துணிவு’ திரைப்படம் உருவாகி வருகிறது. அஜித்தின் 61வது படமாக உருவாகும் இப்படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களுக்கு பிறகு இந்த கூட்டணி 3வது முறையாக இணைந்துள்ளது. 

வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் இந்த படத்தில் சமுத்திரகனி, ஜான் கொக்கன், வீரா உள்ளிட்டோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக துணிவு படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்த நிலையில், பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடித்துவிட்டு, துணிவு படத்தை பொங்கலையொட்டி திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் ரசிகர்களை அஜித் சந்தித்து பேசும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. கேரவனுக்குள் இருந்து வெளியே வரும் அஜித் ரசிகர்களை நோக்கி கை காட்டி, தம்ஸ் அப் செய்து பின்னர் வணக்கம் தெரிவிக்கிறார். இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


 

From Around the web