வைரலாகும் நடிகர் அஜித்தின் குட்டி ஸ்டோரி..!!

 
1

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை அடுத்து ஹெச்.வினோத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் நடிகர் அஜித்.இந்நிலையில் அஜித்தின் புதிய தோற்றங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வந்தன.

சில மாதங்களுக்கு முன்னர் 'ரசிகர்கள் இனிமேல் தன்னை ’தல’ என்றோ; வேறு ஏதாவது பட்டப் பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம்’ என்று நடிகர் அஜித் அறிக்கை மூலம் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா ஒரு குட்டி ஸ்டோரியை கூறும் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், ’இதன் பொருட்டு தொடர்பு உடையவருக்கு பேரன்புடன் அஜித்’ எனக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.


'அந்த குட்டி ஸ்டோரியின் கருவாக, நம்மால் யாரையும் திருப்திப் படுத்த முடியாது, நாம் எது செய்தாளும் மக்கள் நம்மை விமர்சித்துக்கொண்டு தான் இருப்பார்கள். ஆகையால் உங்களுக்குச் சரி என்றுபடுவதை செய்யுங்கள். அடுத்தவர்களின் விமர்சனங்களால் திசை திரும்பிவிடாதீர்கள்’ எனக் கூறப்பட்டுள்ளது.சுரேஷ் சந்திராவின் இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.
 

From Around the web