நடிகர் தீப் சித்து சாலை விபத்தில் மரணம்.. காதலர் தினத்தை கொண்டாட வந்த காதலி உயிர் தப்பினார்!!

 
1

நடிகர் தீப் சித்து டெல்லியில் இருந்து பஞ்சாபில் உள்ள பதிண்டாவுக்கு நேற்று இரவு காரில் சென்று கொண்டிருந்தார். குண்டிலில் - மனேஷ்வர் - பல்வால் விரைவுச் சாலையில் அவர் ஓட்டிவந்த கார் லாரியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தீப் சித்து படுகாயம் அடைந்தார்.

உடனடியாக அரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் உள்ள கார்கோடா மருத்துவமனையில் சேர்க்கபட்டார். அங்கு சிகிச்சை பலனின்று சித்து இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

deep-sidhu-with-his-lover

தீப் தனது காதலியான அமெரிக்காவை சேர்ந்த ரீனா ராய் உடன் காரில் சென்றுள்ளார். ரீனா உயிர்தப்பி விட்டார். ரீனாவின் உயிர் காப்பாற்றப்பட்டது, ஆனால் அவரது காதல் கதை முடிவுக்கு வந்தது. ரீனா அமெரிக்காவில் இருந்து காதலர் தினத்தை தீப் சித்துவுடன் கொண்டாட வந்து இருந்தார். காதலர் தினத்தன்று, இருவரும் தங்கள் படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர்.

2021 குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின் போது நடந்த கலவரம் தொடர்பாக தீப் சித்து கைது செய்யப்பட்டார். அவரது முதல் பஞ்சாபி திரைப்படம் ‘ராம்தா ஜோகி’ 2015-ல் வெளியானது. தீப் சித்துவின் மறைவுக்கு பஞ்சாப் முதல்வர் சன்னி மற்றும் நடிகர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

From Around the web