நடிகர் கெளதம் கார்த்திக்கு விரைவில் டும்டும்டும்..!! மணப்பெண் இந்த நடிகையா ?
பிரபல நடிகர் கார்த்தியின் மகனாக கௌதம் கார்த்திக், தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருகிறார். மணிரத்னத்தின் ‘கடல்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக இவர், என்னமோ ஏதோ, வை ராஜா வை , முத்துராமலிங்கம், ரங்கூன், தேவராட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது சிம்புடன் இணைந்து ‘பத்து தல’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே 'தேவராட்டம்' படத்தில் நடித்தபோது பிரபல மலையாள நடிகை மஞ்சிமா மோகனுடன் கெளதம் கார்த்திக்கு காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. எனினும் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக, இது குறித்த தகவல் வெளியாகும் போதெல்லாம் மறுத்து வந்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது இவர்கள் இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படையாக அறிவித்துள்ளதால், விரைவில் இந்த ஜோடியின் திருமணம் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரே மாதிரியான உடையில் இருவரும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்து மஞ்சிமா மோகன் ஒரு பதிவை வெளியிட்டுளளார். அதில் “மூன்று வருடங்களுக்கு முன்பு நான் முற்றிலும் தொலைந்து போன போது நீ என் வாழ்வில் ஒரு காவல் தேவதை போல வந்தாய். வாழ்க்கையைப் பற்றிய எனது கண்ணோட்டத்தை மாற்றி, நான் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவன் என்பதை உணர உதவினாய்!!
ஒவ்வொரு முறையும் நான் முழு குழப்பமாக உணர்கிறேன், நீ என்னை மேலே இழுக்கிறாய். என் குறைகளை ஏற்றுக்கொள்ளவும், அடிக்கடி நானாக இருக்கவும் நீ எனக்குக் கற்றுக் கொடுத்தாய். நான் உன்னை நேசிக்கும் சிறந்த விஷயம் என்னவென்றால், நான் யார் என்பதற்காக நீ என்னை எவ்வளவு நேசிக்கிறாய என்பதுதான்!
நீ எப்போதும் எனக்கு பிடித்த எல்லாவற்றிலும் இருப்பாய்.” என கூறியுள்ளார்.