நடிகர் ஹரி வைரவன் திடீர் மரணம்..! ரசிகர்கள் அதிர்ச்சி!

 
1

வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட படங்களில் காமெடி காட்சிகளிலும் துணை வேடங்களிலும் நடித்தவர் ஹரி வைரவன். வெண்ணிலா கபடி குழுவில் பரோட்டா காமெடியில் சூரியுடன் வைரவன் நடித்துள்ளார். 50 பரோட்டாக்களை சாப்பிட்டால் சாப்பிட்ட பரோட்டாவுக்கு காசு கொடுக்க வேண்டாம், அதற்கு பதிலாக ஹோட்டல் நிர்வாகமே காசு கொடுக்கும் என்பதுதான் வெண்ணிலா கபடி குழுவில் வரும் ஒரு சீனாகும்.

இந்த போட்டியை அறிந்து கொண்டு பரோட்டா கடையில் நடிகர் சூரி பந்தயத்துக்கு நாங்க வரலாமா என கேட்பார். அதற்கு அந்த கடைக்காரர் ‘இவனைத் தவிர’ யார் வேண்டுமானாலும் வரலாம் என்பார். அந்த சீனில் ‘இவனை தவிர’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் ஹரி வைரவன்.

Hari-vairavan

இவருக்கு அண்மைக்காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை நோய், இதய நோய், இரு கிட்னிகளும் செயலிழப்பு என ஆபத்தான வியாதிகளுடன் ஆளே பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கிறார். கால்கள் இரண்டும் வீங்கி போய் அவரால் நடக்க கூட முடியாத நிலையில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நடிகர் ஹரி வைரவன், இரவு 12.15 மணியளவில் உயிரிழந்ததாக நடிகர் அம்பானி சங்கர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

RIP

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “வெண்ணிலா கபடி குழு திரைப்படப்புகழ் நடிகர் "ஹரி வைரவன் " இன்று காலை 12.15 மணியளவில் இறைவனடி சேர்ந்தார். ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

மதுரையை சேர்ந்த நடிகர் ஹரி வைரவன் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று மதுரையில் அவருக்கு இறுதி சடங்குகள் நடைபெறுகிறது. முக்கிய நடிகர் மற்றும் நடிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

From Around the web