நடிகர் கார்த்தி பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டதா?

 
1

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான சர்தார் படம் வெற்றி நடை போட்டு கொண்டுள்ளது. இவ்வாறு தொடர்ந்து ஹாட்ரிக் ஹிட் கொடுத்த நடிகர் கார்த்தி, தற்போது ஜப்பான் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

தமிழில் குக்கு, ஜோக்கர், ஜிப்ஸி ஆகிய படங்களை இயக்கிய ராஜூ முருகன் தான் ஜப்பான் படத்தையும் இயக்கி வருகிறார் இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

 சினிமாவை போல் சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இயங்கி வருபவர் கார்த்தி.இன்று காலை கார்த்தியின் பேஸ்புக் பக்கத்தில் வீடியோ கேம் விளையாடுவதை வீடியோ எடுத்து நேரலை செய்யப்பட்டு வந்தது. இதை பார்த்த ரசிகர்கள் என்ன நடக்கிறது என தெரியாமல் குழம்பிப்போய் இருந்தனர்.

பின்னர் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள கார்த்தி, தனது பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளதை அதில் உறுதி செய்துள்ளார். அதனை சரி செய்யும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.. 


 

From Around the web