நடிகர் கார்த்தி பட இயக்குனருக்கு நிச்சயதார்த்தம்..!!  

 
1

விஷால் நடிப்பில் வெளியான 'இரும்புத்திரை' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பிஎஸ் மித்ரன். அதையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் 'ஹீரோ' என்ற படத்தை இயக்கினார். அந்தப் படத்திற்கும் ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்தது.பிஎஸ் மித்ரன் தற்போது கார்த்தி நடிப்பில் சர்தார் படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படத்தில் ராஷி கண்ணா கதாநாயகியாக நடித்துள்ளார். 

இந்நிலையில் பிஎஸ் மித்ரனுக்கு பிரபல சினிமா பத்திரிக்கை நிருபர் அஷமீரா ஐயப்பன் உடன் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. பல திரைப்பிரபலங்கள் இவர்களின் நிச்சயத்தில் கலந்து கொண்டுள்ளனர். 'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிக்குமார் இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


 


 

From Around the web