வித்யாசமான லுக்கில் வெளியான நடிகர் கார்த்தியின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!!

 
1

சர்தார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நிறைய திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகர் கார்த்தி தற்போது “ஜப்பான்” என்னும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். குக்கூ, ஜோக்கர் போன்ற படங்களை இயக்கிய பிரபலமான இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாக இருக்கும் இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடிக்க இருக்கிறார்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் உருவாகிறது. ஜப்பான் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.கேஜிஎஃப் படத்தை தமிழில் வெளியிட்டது ட்ரீம் வாரியர்ஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.  

1

இந்த நிலையில் ஜப்பான் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வித்தியாசமாக உருவாகியுள்ளது. சோஃபா ஒன்றில் கார்த்தி மயங்கிய நிலையில் படுத்திருக்கிறார். அவருக்கு பின்னால் சுவரில் மாட்டியிருக்கும் ஒரு புகைப்படத்தில் தங்க நிற ஆடையில் கையில் துப்பாக்கியுடன் சுருட்டை முடி என வித்தியாசமான லுக்கில் இன்னொரு கார்த்தி இருக்கிறார். ரெட்ரோ லுக்கில் இருக்கும் இந்த போஸ்டர் செம்ம கலர்ஃபுல்லாக வெளியாகியுள்ளது. ஜப்பான் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் இது கேங்ஸ்டர் அல்லது ஆக்சன் ஜானரில் இருக்கும் என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.


 

From Around the web