நடிகர் மனோபாலா பூச்சி முருகனுக்கு கௌரவ டாக்டர் பட்டம்..!!

 
1

பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளர் பாரதிராஜாவிடம் உதவியாளராகத் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் நடிகர் மனோபாலா, “தாய்மாமன்” படத்தின் மூலம் இயக்குனராகவும்  அறிமுகமானார்.

இந்நிலையில், பிரபல நடிகர் மற்றும் இயக்குநருமான மனோபாலாவுக்கும், தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவருமான பூச்சி முருகனுக்கும் டாக்டர் பட்டம் வழங்கி சவுத் வெஸ்டர்ன் அமெரிக்க பல்கலைக்கழகம் கெளரவித்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல உயர் கல்வி நிறுவனமான சவுத் வெஸ்டர்ன் அமெரிக்க பல்கலைக்கழகம், டாக்டர் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் எனும் கௌரவ முனைவர் பட்டத்தை மனோபாலாவின் நீண்டகால திரைப்பணிக்காக வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. பல்வேறு துறைகளில் திறம்பட பணியாற்றிவரும் பூச்சி முருகனுக்கும் அவரது சேவைகளை அங்கீகரிக்கும் விதமாக டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

1

மனோபாலாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி உள்ள குளோபல் அச்சீவர்ஸ் கவுன்சில், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் நகைச்சுவை கலைஞராக பல்லாண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் மனோபாலாவுக்கு அவரது பணியை பாராட்டி கௌரவிக்கும் விதமாக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தன்னைக் கெளரவித்த தென்மேற்கு அமெரிக்க பல்கலைக்கழகம் மற்றும் உலகளாவிய சாதனையாளர் கவுன்சிலுக்கு ஆனந்தத்தில் மனோபாலா நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், இத்தனை ஆண்டுகளாக தனக்கு ஆதரவாக இருந்த தனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். இந்த விருதுகளைப் பெற்றதில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் அவர் தனது சமூக வலைத்தளத்தில் இந்த நிகழ்வின் இரண்டு புகைபடங்களையும் பதிவிட்டுள்ளார்.


 


 

From Around the web