மன்னிப்புக் கேட்ட நடிகர் பார்த்திபன்..!! எதற்காக தெரியுமா ? 

 
1

வித்தியாசமான படைப்புகளை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் பார்த்திபன். அந்த வகையில் 'ஒத்த செருப்பு' படத்திற்கு பிறகு பார்த்திபனின் வித்தியாசமான படைப்பாக 'இரவின் நிழல்' திரைப்படம் வெளியானது. உலகிலே ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் நான்-லீனியர் திரைப்படமாக  உருவான இப்படம் கடந்த சில மாதத்திற்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

1

இந்திய சினிமாவில் புதிய முயற்சியாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்காக முதல் முறையாக ஏ.ஆர்.ரகுமானுடன் பார்த்திபன் கூட்டணி அமைத்தனர். ‌ இந்தப் படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், ஆனந்த கிருஷ்ணன், பிரிஜிடா சாகா ஆகியோர் நடித்துள்ளனர்.

திரையரங்கில் வெளியான இப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்தனர்.

1

சில நாட்களுக்கு முன் நடிகர் பார்த்திபன் தனது முகநூல் பக்கத்தில் “காலை வணக்கம்!

அமேசானில் இன்றோ நாளையோ ‘இரவின் நிழல்’ வந்தே விடும் ! அதை வரவேற்க நீங்களும், அறிவிக்க நானும் ஆவலுடன் இருக்கிறேன் பார்ப்போம்!நீங்கள் காட்டும் ஆர்வத்திற்கு நன்றி!!!என படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவலை பகிர்ந்தார்.

இந்நிலையில் இப்படம் ஓடிடியில் வெளியாக தாமதம் ஏற்பட்டதால் இது குறித்து பார்த்திபன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "மன்னிக்க.. நானும் ஆவலுடனே காத்திருக்கிறேன். but some technical issues it's taking time-ன்னு Amazon-ல சொல்றாங்களாம். மீண்டும் ஒரு முறை உறுதிபடுத்திக் கொண்டு தெரிவிக்கிறேன். அதுவரை பொறுத்தருள்க. திரையரங்கில் நீங்கள் எனக்களித்த வரவேற்பே என்னைத் திக்குமுக்காட வைத்தது. நான் பெரிதும் மதிக்கும் நீங்கள் ஒடிடி-யில் வர காத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளித்தாலும், தாமதமாவதற்கு மீண்டும் ஒரு முறை மன்னிப்புக் கேட்டு, ஓடிடியில் வருகையில் பேராதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். 

From Around the web