சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தில் இணைந்த புஷ்பா பட நடிகர்..!!

இப்படத்திற்கான கதை விவாதம் உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் நான்கு மாதங்களுக்கு மேல் நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இதன் படப்பிடிப்பு துவங்கியது. தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. தற்போது இந்தத் தகவலை ஜெயிலர் படப்பிடிப்புத் தளத்திலிருந்து மோகன்லாலின் படத்தை வெளியிட்டு சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதிபடுத்தியது.
இந்நிலையில், ‘ஜெயிலர்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தெலுங்கு நடிகர் சுனில் கதாபாத்திரத்துடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது ஜெயிலர் படக்குழு. இந்த போஸ்டர் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
.@mee_sunil from the sets of #Jailer @rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/JJBfQw91QH
— Sun Pictures (@sunpictures) January 17, 2023