நடிகர் ரஜினிகாந்துக்கு அம்ரித் ரத்னா விருது..!! 

 
1

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கு மேல் கதாநாயகனாகக் கொடிகட்டிப் பறப்பவர் நடிகர் ரஜினிகாந்த்.தன்னுடைய திறமையான நடிப்பால் முதன் முதலில் முள்ளும் மலரும் என்ற திரைப்படத்துக்காகத் தமிழக அரசு விருதை நடிகர் ரஜினிகாந்த் பெற்றார். அதன்பின்னர் பல படங்களுக்குத் தமிழக அரசு விருதை இவர் பெற்றுள்ளார்.

ஒன்றிய அரசின் விருதான பத்மபூஷன் விருது கடந்த 2000 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து இந்தியாவின் தலைசிறந்த விருதான பத்ம விபூஷன் விருது கடந்த 2016 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.

தற்போது இந்த ஆண்டுக்கான அம்ரித் ரத்னா விருதை நடிகர் ரஜினிகாந்துக்கு, பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான நியூஸ் 18 வழங்குகிறது. 

From Around the web