செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் செஸ் வீரர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து 

 
1

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறுகின்றது. இந்த போட்டியில் சர்வதேச அளவில் 187 நாடுகள் பங்கேற்பதுடன் 2,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்த போட்டிக்கான தொடக்க விழா நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்.

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் செஸ் வீரர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். நான் மிகவும் விரும்பும் ஒரு உள்ளரங்க விளையாட்டு செஸ். ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்க வந்துள்ள அனைவருக்கும் வாழ்த்துகள் என நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.


 

From Around the web