ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்!! வைரல் வீடியோ

 
1

ஆங்கிலப் புத்தாண்டான 2023-ம் ஆண்டு இன்று பிறந்துள்ளது. இதையொட்டி தமிழ்நாடு உள்பட உலகின் அனைத்து பகுதிகளிலும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. தற்போது சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் சிறப்பாக நடந்து வருகின்றன.

உலகிலேயே முதலாவதாக மத்திய பசுபிக் தீவு நாடான கிரிபாட்டியில் புத்தாண்டு பிறந்தது. மக்கள் வானவேடிக்கைகளுடன் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரிலும் புத்தாண்டு பிறந்தது.  மக்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை தெரிவித்தபடி உற்சாகமாக கொண்டாடினர்.

இதையொட்டி பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. பொதுமக்கள் ஒருவருக்கொருவார் வாழ்த்து தெரிவித்தும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், புத்தாண்டு வாழ்த்து கூற போயஸ் கார்டன் இல்லம் முன்பு திரண்டிருந்த ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து கையசைத்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.பிறந்த நாளில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்திக்க முடியமால் ஏமாற்றம் அடைந்த ரசிகர்களுக்கு. புத்தாண்டில் அவரை நேரில் பார்த்ததால் சந்தோஷத்தில் துள்ளி குதித்தனர். 


 

From Around the web