நடிகர் சந்தானத்தின் குலுகுலு டீஸர் வெளியீடு..!! 

 
1

சந்தானத்தின் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் குலுகுலு. இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அதுல்யா நடிக்கிறார் . ரத்தன குமார் இயக்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.இந்த படம் வரும் ஜூலை 29-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் சேட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றிய நிலையில் நேற்று இப்படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தில் ஊர் ஊராக சுற்றும் தேசாந்திரியாய் சந்தானம் நடித்துள்ளார். சந்தானத்தின் வழக்கமான காமெடி கலாட்டாவில் உருவாகியுள்ள இந்த படத்தில் அதுல்யா சந்த்ரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், ‘லொள்ளு சபா‘ மாறன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

From Around the web