நடிகர் சித்தார்த் பெற்றோர்களுக்கு மதுரை விமான நிலையத்தில் நேர்ந்த கொடுமை!!

 
1

‘பாய்ஸ்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். அதனைத் தொடர்ந்து ஆய்த எழுத்து, காதலில் சொதப்புவது எப்படி, உதயம் என்எச் 4, தீயா வேலை செய்யணும் குமாரு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் தனது பெற்றோரை இந்தியில் பேசச் சொல்லி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாக நடிகர் சித்தார்த் குற்றம் சாட்டியுள்ளார்.

Siddharth

இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மதுரை விமான நிலையத்தில் சோதனையில் ஈடுபடும் சி.ஆர்.பி.எப் வீரர்கள் புகைப்படத்துடன்,"காலியாக இருந்த மதுரை விமான நிலையத்தில் சி.ஆர்.பி.எப் அதிகாரிகளால் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்கு உள்ளானோம்.

என் வயதான பெற்றோரின் பைகளில் இருந்த சில்லறை காயின்களை வெளியே எடுக்க வைத்தனர். ஆங்கிலத்தில் பேசுமாறு வலியுறுத்தியும் தொடர்ந்து எங்களிடம் இந்தியில் பேசிக்கொண்டு இருந்தனர்.மிகவும் கடுமையாக நடந்துக்கொண்டனர். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்த போது, இந்தியாவில் இப்படித்தான் இருக்கும் என்றும் கூறினர்.

siddharth

வேலையில்லாதவர்கள் அதிகாரத்தை காட்டுகின்றனர் என குறிப்பிட்டிருந்தார். இன்ஸ்டாகிராம் ஸ்டோரி 24 மணி நேரத்தில் மறைந்துவிடும் நிலையில், அதன் ஸ்க்ரீன்ஷாட் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From Around the web