பிள்ளைகளை டார்ச்சர் செய்ய வேண்டாம் - பெற்றோர்களுக்கு  நடிகர் சிம்பு அட்வைஸ்..!!

 
1

கெளதம் மேனன் மற்றும் சிம்பு கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'. இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இப்படம் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர்கள் கமல்ஹாசன், சிம்பு, உதயநிதி மற்றும் இயக்குனர் கௌதம் மேனன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய சிம்பு பெற்றோர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அவர் “ நான் எல்லா பெற்றோர்களிடமும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.  பிள்ளைகளை திருமணம், திருமணம் எனக் கூறி டார்ச்சர் செய்ய வேண்டாம்; சமூகம் கொடுக்கும் அழுத்தங்களால்  நிறைய தவறான திருமணங்கள் நடக்கின்றன.அதனால பசங்க முதல்ல வாழ்க்கையை வாழட்டும். யார் நமக்கு சரியாக இருப்பார்கள்..இல்லன்னு…எல்லாத்தையும் மீறி மேலே ஒருத்தர் இருக்காரு. அவரா பார்த்து அனுப்புவாரு. அதுவரை அமைதியா வெயிட் பண்ணுறது நல்லதுன்னு நினைக்கிறேன் என தெரிவித்தார்.

இதேபோல் ரசிகர்களிடம் அப்பா அம்மாவை பாத்துகோங்க…கடைசி காலத்துல மட்டுமல்ல என்றைக்கும் அவர்களை கை விட்றாதீங்க… என தெரிவித்தார்.

From Around the web