மீண்டும் தெலுங்கு பாடலை பாடிய நடிகர் சிம்பு.. எந்த படத்தில் தெரியுமா..?

 
1
நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என கோலிவுட்டில் பல அவதாரங்களை எடுத்த சிம்பு,வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்த மாநாடு திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து அவருக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. இதையடுத்து கவுதம் மேனன் கூட்டணியில் வெளியான வெந்து தணிந்தது காடு படமும் மெகா வெற்றி பெற்றது.

இதற்கிடையே, லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி நடிப்பில் வெளிவந்த தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான “தி வாரியர்” படத்தில், புல்லட் என்ற பாடலை சிம்பு பாடி அசத்தியிருந்தார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்த இந்த பாடல் பட்டி தொட்டியெங்கும் வைரலானது.

இந்நிலையில், தற்போது தெலுங்கில் அடுத்த பாடல் ஒன்றை சிம்பு பாடியுள்ளார். இந்த பாடல் தொடர்பான ப்ரோமோ வீடியோ ஒன்றும் வெளியாகி வைரலாகி வருகிறது. தெலுங்கில் தயாராகி வரும் 18 பேஜஸ் என்ற படத்தில் தான் சிம்பு இந்த பாடலை பாடியுள்ளார்.

18 பேஜஸ் படத்தில் நிகில் சித்தார்த்தா ஹீரோவாக நடித்துள்ள நிலையில், அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். சிம்பு பாடியுள்ள பாடல் அடுத்த மாதம் 5ஆம் தேதி வெளியாகும் நிலையில், 18 பேஜஸ் படம் அடுத்த மாதம் 23ஆம் தேதி வெளியாக உள்ளது.


 


 

From Around the web