பாகுபலியின் அம்மா குறித்து நெகிழ்ந்த நடிகர் சூர்யா..!!

 
1

ரத்த சரித்திரம் படத்தில் நடித்ததன் மூலம் நடிகர் சூர்யாவுக்கு தெலுங்கில் நிறைய ரசிகர்கள் உருவாகினர். மேலும், அவர் கஜினி படத்திலிருந்தே தனது அனைத்து படங்களையும் தெலுங்கிலும் டப் செய்து வெளியிட்டு வருகிறார். இதன் மூலம் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நடிகர் சூர்யா, அடுத்தடுத்து படங்களை தெலுங்கில் அறிவித்து வருகிறார்.

இந்நிலையில், ஒரு ஊடக நேர்காணலில் பேசிய சூர்யா, பிரபாஸ் வீட்டில் சமைத்து தனக்கு வழங்கப்பட்ட உணவு குறித்த சுவாரஸ்ய தகவலை பகிர்ந்தார். இது தொடர்பாக பேசிய அவர், ”நான் ஹைதராபாத்தில் ஒருமுறை ஷூட்டிங்கில் இருந்தபோது, ​​நடிகர் பிரபாஸ் என்னை இரவு உணவிற்கு அழைத்தார். நான் வருகிறேன் என்று சொன்ன நிலையில், எனது படப்பிடிப்பு 2 மணி நேரம் தாமதமாகி விட்டது.

1

மாலை 6 மணிக்கு தொடங்க வேண்டிய ஷூட்டிங், இரவு 8 மணிக்கு தொடங்கி இரவு 11.30 மணி வரை நடந்ததால், பிரபாஸை பிறகு சந்திக்கலாம் என்று நினைத்துக் கொண்டு, அப்போது அவரிடம் மன்னிப்பு கேட்கலாம் என்றும் நினைத்திருந்தேன். அன்று இரவு எனக்கு ஹோட்டல் அல்லது தயாரிப்பு நிறுவன மெஸ்ஸில் இருந்து உணவு வரும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஷூட்டிங் முடிந்து இரவு 11.30 மணியளவில், ஹோட்டலின் காரிடாரில் பிரபாஸ் எனக்காக சாப்பிடாமல் காத்துக்கொண்டிருந்த தகவல் வந்து அதிர்ச்சியடைந்தேன். அவர் எனக்காக அவரது அம்மா தயாரித்த உணவை கொண்டு வந்திருந்தார். என் வாழ்நாளில் நான் அவ்வளவு சுவையான பிரியாணியை சாப்பிட்டதில்லை” என்றார்.

From Around the web