மாரி 2 வில்லின் நடிகர் டோவினோ தாமஸ்- ஆ இவர்... ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போய் இருக்கிறார்..!!  

 
1

மாரி 2 படத்தில் கொடூர வில்லனாக நடித்திருப்பவர் டோவினோ தாமஸ்.அந்த படத்திற்கு பிறகு வேறு எந்த தமிழ் படத்திலும் அவர் நடிக்கவில்லை. இவர் தற்போது மலையாள சினிமாவின் ஸ்டார் நடிகராக உருவெடுத்துள்ளார். அவர் நடிப்பில் வெளியான மின்னல் முரளி திரைப்படம் இந்திய அளவில் சூப்பர் ஹிட் ஆனது. அதையடுத்து தற்போது டோவினோ நடித்துள்ள தல்லுமாலா திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், டோவினோ தாமஸ் அட்ரிஷ்ய ஜலகங்கள் (Adrishya Jalakangal) என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அதில் நடித்த அனுபவம் பற்றி பேசி இருக்கும் அவர் சில புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு இருக்கிறார்.

அதை பார்த்த ரசிகர்கள் எல்லோரும் ஆச்சர்யம் அடைந்து இருக்கிறார்கள். அவரா இது என அவரது லுக்கை பார்த்து ஆச்சர்யம் அடைந்து இருக்கிறார்கள்.

1

From Around the web